அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்காக பல தன்னார்வலர்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், விஷ்வ இந்து பரிஷத், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் ஆகியோர் பாஜகவுடன் ஒருங்கிணைந்து ராமர் கோயிலுக்கு நன்கொடைகளை சேகரிக்கும் முயற்சியில் புதிய வழியை கையாண்டு வருகின்றனர். அவர்கள், மக்களின் வீடுகளுக்கு நேராக சென்று பணத்தை நன்கொடையாக சேகரித்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ காந்திலால் பூரியா, "மக்கள் நேரடியாக அறக்கட்டளையின் கணக்கிற்கு பணத்தை வழங்க வேண்டும். தனிப்பட்ட நபர்களுக்கு பணம் அளிப்பது தவறுதலாக பயன்படுத்தப்படலாம். பெரும்பாலான பாஜகவினர், நன்கொடை பணத்தில் குடித்து சீரழித்து கொண்டிருக்கின்றனர். கடந்தாண்டு, வசூலிக்கப்பட்ட பணம் எங்குச் சென்றது. லட்சக்கணக்கில் வாங்கிய பணத்திற்கு இதுவரை முறையான கணக்கு காட்டவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.