ETV Bharat / bharat

மதச்சார்பற்ற ஜனதா தளம்-பாஜகவுடன் இணைகிறதா?

author img

By

Published : Dec 21, 2020, 12:42 PM IST

கர்நாடக மாநிலத்தின் முக்கியக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதாதளம் பாஜகவுடன் இணையப் போவதாக வெளியான செய்தியை இரு கட்சித் தலைவர்களும் மறுத்துள்ளனர்.

BJP, JD(S)
BJP, JD(S)

கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடத்திவருகிறது. அங்கு எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் குமாராசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் முக்கியக் கட்சியாக உள்ளது.

கர்நாடக அரசியல் களம்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி வைத்து ஆட்சி நடத்தியது. பின்னர் ஆட்சியில் அதிருப்தி ஏற்பட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் ராஜினாமா செய்ததால் அங்கு கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சி அமைத்தது.

பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால் பாஜக தற்போது அங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்துகிறது. இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களாக மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜகவுடன் நெருக்கம் காட்டிவருகிறது.

அம்மாநிலத்தில சட்டப்பேரவையில் பாஜக அரசு கொண்டுவந்த நில சீர்திருத்தச் சட்டத்திற்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு அளித்தது. இதற்கு முன்னார் 2006ஆம் ஆண்டிலும் இரு கட்சிகள் கூட்டணி வைத்து ஆட்சி நடத்தின.

இரு கட்சிகளும் இணையுமா?

இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜவுடன் தன்னை இணைக்கப்போவதாகச் செய்திகள் ஊடகங்களில் பரவித்தொடங்கியது. வரும் பிப்ரவரி மாதத்தில் இந்த இணைப்பு ஏற்படும் கூறப்பட்டது. இதை இரு கட்சித் தலைவர்களும் மறுத்துள்ளனர்.

இந்தச் செய்தி முற்றிலும் கற்பனை என மறுத்துள்ள அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா, இந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றுள்ளார்.

தற்கொலைக்குச் சமமான இந்த நடவடிக்கையை மேற்கொள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு எந்தவிதத் தேவையும் இல்லை எனத் தெரிவித்த அக்கட்சித் தலைவர் குமாரசாமி எதிர்காலத்திலும் இதுபோன்று நடக்க சாத்தியமில்லை எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவில் புத்த நூலகத்தை உருவாக்க முனையும் பிரதமர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.