மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியிலிருந்த கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி, பாஜகவைச் சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சரானார். கடந்த மார்ச் 23ஆம் தேதி இரவு மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டாலும் அந்த மாநிலத்தில் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. இதற்குக் கட்சிக்குள் நடைபெற்றுவரும் பதவிக்கான போட்டிதான் காரணம் என அரசியல் பார்வையாளர்கள் கருத்துதெரிவித்தனர்.
இந்த விஷயம் பூதாகரமாக மாறியதையடுத்து, மத்தியப் பிரதேசத்தில் ஏப்ரல் மாதத்தில் ஐந்து அமைச்சர்களுடன் செயல்பட தொடங்கியது. இருப்பினும், அமைச்சர் பதவிக்கான அரசியல் போட்டி கட்சிக்குள் தொடர்ந்ததால், ஜூலை 2ஆம் தேதி முதலமைச்சர் சவுகான் தலைமையிலான அமைச்சரவை 28 அமைச்சர்களோடு மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதன் பின்னணியில் அண்மையில் பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதிக்கம் இருப்பதாக அறியமுடிகிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக இந்தி திரை நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சத்ருகன் சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில், "மகாராஜ், சவுகான், கருத்துவேறுபாடு கொண்ட பிரிவு" என்ற பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
-
Are you going to say something about this Sir?👇👇
— Shatrughan Sinha (@ShatruganSinha) July 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
😔
मध्य प्रदेश में भाजपा तीन खेमो में बट गयी।
1.महाराज,
2.नाराज ,और
3.शिवराज
🤣
">Are you going to say something about this Sir?👇👇
— Shatrughan Sinha (@ShatruganSinha) July 7, 2020
😔
मध्य प्रदेश में भाजपा तीन खेमो में बट गयी।
1.महाराज,
2.नाराज ,और
3.शिवराज
🤣Are you going to say something about this Sir?👇👇
— Shatrughan Sinha (@ShatruganSinha) July 7, 2020
😔
मध्य प्रदेश में भाजपा तीन खेमो में बट गयी।
1.महाराज,
2.नाराज ,और
3.शिवराज
🤣
தற்போது மத்தியப் பிரதேசத்தில் பாஜகவில் மூன்று முகாம்கள் உள்ளதாகவும், அதன் காரணமாக விரிவுப்படுத்தப்பட்ட அமைச்சரவையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான இலாகாக்களை ஒதுக்க காலதாமதம் ஏற்பட்டிருப்பதாகவும் இந்த ட்வீட்டின் மூலம் அவர் உணர்த்தியுள்ளார். மத்தியப் பிரதேசம் தலைநகர் போபாலில் நடக்கும் பதவி நாற்காலிச் சண்டையில் டெல்லி தலைமை தலையிட்டே தீர வேண்டிய சூழல் எழுந்திருப்பது கவனிக்கத்தக்கது.