ஆந்திர மாநிலம் விஜயவாடா மக்களவைத் தொகுதியில் தெலுங்கு நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, '2014ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல பாஜக தலைவர்கள் ஆந்திர மாநிலத்திற்கு 10 வருடங்களுக்குள் சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக உறுதியளித்தனர். ஆனால் மோடி பதவியேற்று இந்த ஐந்து வருடங்களில் அதனை நிறைவேற்றியபாடில்லை.
இதேபோல், காங்கிரஸ் கட்சியும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்திற்கு ஐந்து வருடங்களில் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுமென்று வாக்குறுதி அளித்தனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வரவில்லை. ஒருவேளை வந்திருந்தால் செய்திருப்பார்களா? என்று சந்தேகம்தான்.
சிறப்பு அந்தஸ்து பெறுவதில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் அவ்வப்போது தன் முடிவுகளை மாற்றிக்கொண்டே இருக்கிறார்' என அவர் குற்றம்சாட்டினார்.