இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசி அவர், "தெலங்கானாவில் ஆட்சியமைப்போம் என பாஜகவினர் கூறிவருகின்றனர்.
பிரதமர் மோடியை விட தெலங்கானா முதலமைச்சர் கே.சி.சந்திரசேகர ராவ் தீவிர இந்து மத பக்தர். மோடி இரண்டு கோயிலுக்குச் சென்றால், சந்திரசேகர ராவ் ஆறு கோயிலுக்குச் செல்வார்.
இந்து மதத்தை வைத்து கே.சி.ஆரை. வீழ்த்தமுடியாது என்று பாஜகவுக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் இந்து மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் இந்துத்துவாவுக்கு எதிரானவர்கள்" எனக் கூறியுள்ளார்.
தெலங்கானாவில் பாஜக தொண்டர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக மத்திய உள்ளதுறை அமைச்சரும், அக்கட்சியின் தேசிய தலைவருமான அமித்ஷா இன்று அம்மாநிலத்துக்கு செல்ல இருக்கிறார்.