நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக முதற்கட்டமாக 184 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. தலைநகர் டெல்லியில், மத்திய அமைச்சரும் அக்கட்சி மூத்த தலைவருமான ஜே.பி.நட்டா வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார். அதில், பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியிலும், ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியிலும், நிதின் கட்காரி நாக்பூரில் தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி இரானி ராகுல் காந்தி வழக்கமாக நிற்கும் உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை தேர்தலில் போட்டியிடுவதாக பாஜக தலைவர் அமித்ஷா, இந்த முறை அத்வானி வழக்கமாகப் போட்டியிடும் தொகுதியான காந்திநகரில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக சார்பில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்:
கோயம்புத்தூர் - சி.பி.ராதாகிருஷ்ணன்
ராமநாதபுரம் - நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி - பொன்.இராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி - தமிழிசை சவுந்திரராஜன்
சிவகங்கை - ஹெச்.ராஜா