உலகின் மிகப்பெரிய கட்சியான பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவராக ஜெகத் பிரகாஷ் நட்டா என்ற ஜே.பி. நட்டா அறிவிக்கப்பட்டார். பின்னர் ஏகாதசி நாளான இன்று மதியம் 2.30 மணிக்கு அவர் பதவியேற்றுக்கொண்டார்.
இந்தப் பதவிக்கு ஜே.பி. நட்டா போட்டியின்றித் தேர்வாகியுள்ளார். மோடி-அமித் ஷா கூட்டணிக்குப் பிறகு கட்சியை வழிநடத்தும் தலைவராக ஜே.பி. நட்டா மாறியுள்ளார். முன்னதாகப் பாஜக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அந்த அறிக்கையில், ஒரு தேர்தல் தேவைப்பட்டால் 21ஆம் தேதி (அதாவது நாளை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜே.பி. நட்டா பாஜக தலைவராக இன்று பொறுப்பேற்றுள்ளார்.
அவருக்கு அமித் ஷா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். பாஜகவின் தேசியத் தலைவரை முடிவுசெய்ய குறைந்தபட்சம் 50 விழுக்காடு மாநிலத் தலைவர்களின் ஆதரவு வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'ராகுல் காந்தி சி.ஏ.ஏ. குறித்து 10 வாக்கியமாவது பேச வேண்டும்' - ஜே.பி. நட்டா