ETV Bharat / bharat

'மதச்சார்பின்மைக்கு எதிராகச் செயல்படும் பாஜக!' - குற்றஞ்சாட்டும் சமூக செயற்பாட்டாளர்கள் - மதச்சார்பின்மை

டெல்லி: நவராத்திரியை முன்னிட்டு நடத்தப்படும் இதிகாச நாடகங்களில், மத்திய அமைச்சர்கள் நடிப்பது மதச்சார்பின்மைக்கு எதிரானது என சமூக செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

BJP
author img

By

Published : Oct 4, 2019, 11:53 AM IST

நவராத்திரி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு நாட்டின் தலைநகரான டெல்லியில் இதிகாச நாடகங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், ஃபகன் சிங் குலஸ்தே, மத்திய முன்னாள் அமைச்சர் சுரேஷ் பாபு ஆகியோர் கடந்தாண்டு நவராத்திரி விழாவின்போது நாடகங்களில் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்தனர்.

  • சர்ஜிக்கல் ஸ்டிரைக்,
  • தேசிய குடிமக்கள் பதிவேடு

குறித்த வசனங்கள் கடந்தாண்டு நடந்த நாடகங்களில் இடம்பெற்றதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. "பாஜகவினர் இம்மாதிரியான நாடகங்களில் நடிப்பது தவறல்ல; ஆனால் இந்திய அரசியலமைப்பின் கீழ் பதவி ஏற்றுள்ள அமைச்சர்கள் நடிப்பது தவறு. மதச்சார்பற்ற கொள்கைக்கு இது எதிரானது" என சமூக செயற்பாட்டாளர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

மேலும் இந்த நாடகங்களைப் பயன்படுத்தி பாஜக, தேர்தல் பரப்புரை செய்ததாகவும் அப்போது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை எழுப்பினர். இந்நிலையில் இந்தாண்டு நவராத்திரி ராமாயண நாடக நிகழ்ச்சியில்,

  1. டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி - அங்கத்
  2. குலஸ்தே - அகத்திய முனிவர்
  3. சுரேஷ் பாபு - நிஷத் ராஜா

உள்ளிட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவுள்ளனர். இந்தாண்டும் மத்திய அமைச்சர்கள் நாடகங்களில் நடிக்கவுள்ளது சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: ஆற்றில் 60 பயணிகளுடன் முழ்கிய படகு - பிகாரில் சோகம்

Intro:Body:

No Difference between Congress and Modi Govt’s International Stand on J&K, Says Shashi Tharoor

https://www.news18.com/news/politics/no-difference-between-cong-modi-govts-international-stand-on-jk-tharoor-2332875.html

Shashi Tharoor: Congress & BJP's stand is the same - we can't negotiate with a gun pointed to our heads. It's the position of India. There's no need of a third party. We're not talking to them (Pakistan) right now because they're using terrorists & we can never accept that.(3.10)

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.