டெல்லியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில், “மேற்கு வங்கம் கரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை மம்தா பானர்ஜி மறைத்து விட்டார்.
தற்போது எங்கே இருக்கிறீர்கள் பானர்ஜி? நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிய மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். வெளிமாநிலத்தில் உள்ள வங்காளத் தொழிலாளர்கள் உங்களின் உதவியை எதிர்நோக்குகிறார்கள்” என்றார்.
மேலும், “கரோனா பாதிப்பாளர்களின் உண்மையான எண்ணிக்கை மற்றும் தகவல்களை மம்தா பானர்ஜி மறைத்துவிட்டார்” என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மாநிலத்தின் அதிகாரத்தை மம்தா பானர்ஜி தவறாக பயன்படுத்துகிறார் என்று பாஜக குற்றஞ்சாட்டிள்ள நிலையில், மத்திய அரசின் நிர்வாக இயந்திரத்தை பாஜக தவறாக பயன்படுத்துகிறது என திரிணாமுல் காங்கிரஸ் பதில் புகாரளித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் கரோனா வைரஸூக்கு 1,939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 185 ஆக உள்ளது. நாடு முழுக்க கரோனா வைரஸ் பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ஹாண்ட்வாரா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஹிஸ்புல் முஜாஹிதீன்!