ஆமணக்கு செடியில் இருந்து உயிரி எரிபொருட்களை வெற்றிகரமாக பிரித்தெடுத்த இந்திய பெட்ரோலிய ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.ஐ.பி- IIP), சமையல் எண்ணெய்களை டீசலாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.
கடந்த மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் விழாவில், ஐ.ஐ.பி விஞ்ஞானிகள் இதை காட்சிக்கு வைத்தனர். புதிய சமையல் எண்ணெய்களில் மெத்தனால் மற்றும் சில இரசாயனங்கள் சேர்த்து, டீசலாக மாற்றலாம். இது மலிவானதாக இருக்கும். ஐ.ஐ.பி பல ஆண்டுகளாக ஆமணக்கு செடியில் இருந்து உயிரி எரிபொருளை உற்பத்தி செய்து வருகிறது.
பல மாநிலங்களில் விவசாயிகள் ஆமணக்கை ஒரு வணிகப்பயிராகவே சாகுபடி செய்யத் தொடங்கிவிட்டனர். ஆமணக்கு தாவரங்களை விரைவாக வளர்க்க, இஸ்ரேல் உருவாக்கிய தொழில்நுட்பத்தை ஏற்று இந்திய விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர்.
மறுபக்கம், மத்திய அரசு அளித்து வரும் ஊக்கத்தால், நாடு முழுவதும் எத்தனால் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. சமையல் எண்ணெயில் இருந்து உயிரி எரிபொருளை உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஆமணக்கில் இருந்து ஐ.ஐ.பி தயாரித்த உயிரி எரிபொருள், பல ஆண்டுகளுக்கு முன்பே இரண்டு ‘2-ஸ்ட்ரோக்’ என்ஜின்களில் வெற்றிகரமாக பயன்படுத்தி பார்க்கப்பட்டது.
மகாராஷ்டிராவில் சில போக்குவரத்து நிறுவன வாகனங்கள் இந்த எரிபொருளில் இயங்கின. இத்தகைய முயற்சிகள் இருந்தபோதும், வணிக அடிப்படையில் உயிரி எரிபொருள் உற்பத்தி இன்னும் தொடங்கப்படவில்லை.
புதிய சமையல் எண்ணெய்களில் இருந்து தயாரிக்கப்படும் உயிரி எரிபொருள்கள், வேகத்தை அதிகரிக்கின்றன. ஆமணக்கில் இருந்து 330 கிலோ டீசல் உதவியுடன் தயாரிக்கப்பட்ட உயிரி எரிபொருளால் விமானம் வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானம், 2018ஆம் ஆண்டில் டெல்லியில் இருந்து 45 நிமிடங்கள் டேராடூனுக்கு பறந்தது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎஸ் -32 ரக போக்குவரத்து விமானம், 2019 குடியரசு தின அணிவகுப்பின் போது, பயோ டீசலுடன் இயக்கப்பட்டது.
ஆமணக்கு தாவரத்தில் 40 சதவீத எண்ணெய் உள்ளது. அதனுடன் விமான டர்பைன் எரிபொருள் (ஏடிஎஃப்) இருந்ததால், அந்த விமானம் வானில் பறந்தது. சத்தீஸ்கர் மாநிலத்தில், மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 500 விவசாயிகள் ஆமணக்கு சாகுபடி செய்துள்ளனர்.
இயற்கையில், சுமார் 400 வகையான விதைகள், உயிரி எரிபொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன. மண்ணெண்ணெய் அடிப்படையிலான விமான டர்பைன் எரிபொருளில் பறப்பது, வானிலையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
காலநிலை மாற்றத்திற்கு சுமார் 4.9 சதவீதம், விமான பயணங்கள் காரணமாக அமைகிறது. உயிரி எரிபொருள்களை பயன்படுத்துவதன் மூலம், கரியமில வாயு உமிழ்வு வெகுவாகக் குறைகிறது என்று, ஐ.ஐ.பி.யின் மூத்த விஞ்ஞானி டாக்டர் ரஞ்சன் ரே விளக்கினார்.
இந்தியாவில் விமான நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் ஜெட் விமானங்களுக்கு, ஆண்டுக்கு 60 - 70 லட்சம் டன் விமான டர்பைன் எரிபொருள் தேவைப்படுகிறது. அந்த தேவையில் பாதியை, பயோ டீசல் பூர்த்தி செய்கிறது.
இந்த பாதியில் நுகரப்படும் சமையல் எண்ணெயில் மூன்றில் ஒரு பங்கு, விமான டர்பைன் எரிபொருள் செலவோடு, கரியமில வாயு உமிழ்வையும் குறைக்கும். ஒரு லிட்டர் சமையல் எண்ணெயில் இருந்து 850 - 950 மில்லி லிட்டர் பயோ - டீசலை உற்பத்தி செய்து டீசலாக பயன்படுத்தலாம்.
ஓட்டல்களிலும், பிற வணிக உணவகங்களிலும் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதற்கு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய நிறுவனம் (FSSAI) புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சமையல் எண்ணெய்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பயோ டீசலால் இயக்கப்படும் ஜெட் விமானங்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள், காலநிலை மாற்றத்திற்கு காரணமான கரியமில வாயுவை வெளியேற்றுவதில்லை.
எனவே, பயோ டீசலை பல வழிகளிலும் தயாரிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே ஏறத்தாழ 9 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில், கரும்பில் இருந்து எத்தனால் பிரித்தெடுக்கப்பட்டு இயந்திரங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த 2005ஆம் ஆண்டில் இந்தியா சுமார் 160 பில்லியன் லிட்டர் எத்தனால் தயாரித்து உலகின் நான்காவது பெரிய எத்தனால் உற்பத்தியாளராக திகழ்ந்தது. பயோ டீசல் மற்றும் வழக்கமான எரிபொருளின் கலவையை பயன்படுத்துவதன் மூலம் டீசல் பயன்பாட்டை 20% குறைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டில், 10 ஆசியான் உறுப்பு நாடுகளுடன் (இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர் மற்றும் கம்போடியா), மற்றும் சீனா, ஜப்பான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகியவற்றுடன் கிழக்கு ஆசிய எரிசக்தி பாதுகாப்பு குறித்த செபு பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
இந்த பிரகடனம், உயிரி எரிபொருள்களின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நாடுகள் ஏற்கனவே உயிரி எரிபொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான பாதையில் சென்று கொண்டிருக்கின்றன; தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டிற்கு எதிராக, எண்ணெய் இருப்பை குறைத்து வருகின்றன.
அமெரிக்கா, பிரேசில், கனடா, கொலம்பியா மற்றும் வெனிசுலா ஆகியவை ஏற்கனவே உயிரி எரிபொருள் உற்பத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளன. உலகின் உயிர் எரிபொருளில் சுமார் 40% அமெரிக்காவில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 3 முதல் 4 டிரில்லியன் டன் உயிரி எரிபொருள்களை அமெரிக்கா உற்பத்தி செய்கிறது.
மேலும் தொழில்துறையில் ஒரு முன்னணி நாடாக திகழ்கிறது. 2.5 பில்லியன் டன் உற்பத்தி செய்யும் பிரேசில் இரண்டாவதாக உள்ளது. ஒரு டன் எண்ணெய் பற்ற வைக்கும்போது 3.15 டன் கரியமில வாயு உருவாகிறது.
நாடுகள் பலவும் மாசுபடுத்தும் எண்ணெய்களுக்கு பதிலாக, பாதுகாப்பான உயிரி எரிபொருட்களை உற்பத்தி செய்யும் புதுமையான திட்டங்களுடன் முன்னேறி வருகின்றன.
புதிய / பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்கள் மற்றும் விலங்குகளின் கொழுப்பில் இருந்து பரவலாக உயிரி எரிபொருளை அமெரிக்கா உற்பத்தி செய்கிறது. இவ்வகை உயிரி எரிபொருள், பொதுமக்கள் மற்றும் இராணுவ மோட்டார் வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது.
இதில் 20 பங்கு உயிரி எரிபொருளும், மீதமுள்ள 80 பங்கு சாதாரண டீசலும் சேர்க்கப்படுகிறது. 2018 ஆம் ஆண்டில், உயிரி எரிபொருள்களுடன் பெரிய விமானத்தை அமெரிக்கா அறிமுகப்படுத்தியது.
சோளம், மரத்தூள், பாசி, விலங்கு மற்றும் பிற கழிவுகள் போன்ற பல மூலப்பொருட்களில் இருந்து பயோ-மீத்தேன், பயோ டீசல் போன்ற உயிரி எரிபொருளை உற்பத்தி செய்ய, உலகளவில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
சர்வதேச எரிசக்தி நிறுவனம் நிர்ணயித்த இலக்குகளை அடையவும், நிலையான வளர்ச்சியை எட்டவும் உலகளாவிய உயிரி எரிபொருள் உற்பத்தி, வரும் 2030ஆம் ஆண்டுக்குள் மூன்று மடங்காக அதிகரிக்க வேண்டும்.
அதேநேரம், விவசாய பயிர்கள் உயிரி எரிபொருள் உற்பத்தி ஆலைகளாக மாற்றப்பட்டால், உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என்ற கவலையும் உள்ளது.
இதையும் படிங்க : பயோ பிளாஸ்டிக்கை கண்டுபிடித்து அரசுப்பள்ளி மாணவி அசத்தல்!