ETV Bharat / bharat

'சர்வதேச பயணத்தில் கட்டுப்பாடுகள் தொடரும்' - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி - Hardeep Singh Puri on International air travel

டெல்லி: கரோனா பரவல் முழுவதுமாகக் கட்டுப்படுத்தவில்லை என்பதால் சர்வதேச போக்குவரத்திற்கான கட்டுப்பாடுகள் தொடரும் என்று விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

Hardeep Singh Puri
Hardeep Singh Puri
author img

By

Published : Jul 16, 2020, 7:35 PM IST

கோவிட்-19 பரவல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு பல நாடுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களைத் தாயகம் அழைத்துவர சிறப்பு விமானங்கள் மட்டுமே தற்போது இயக்கப்படுகின்றன.

இந்தியாவில் சர்வதேச விமான சேவை எப்போது தொடங்கப்படும் என்ற கேள்விக்கு மத்திய அரசு, இதுவரை தெளிவான பதில் அளிக்கவில்லை. இந்நிலையில், சர்வதேச விமானப் பயணத்திற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து பேசிய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, "கோவிட்-19 பரவலுக்கு முன் எவ்வளவு விமானங்கள் இயக்கப்பட்டனவோ, அந்த எண்ணிக்கையை நாம் அடையும் வரை, இருதரப்பு கட்டுப்பாடுகள் என்பது தொடரும்.

இந்த இரு தரப்பு ஒப்பந்தங்கள் என்பது குறிப்பிட்ட அளவு மக்களை அழைத்துவர உதவும்; ஆனால் பல வரையறுக்கப்பட்ட பல கட்டுப்பாடுகளுடன்! ஏனென்றால், சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இன்னும் பல கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து விதித்துவருகின்றன" என்றார்.

இரு தரப்பு ஒப்பந்தம் என்பது சர்வதேச அளவிலான விமானப் போக்குவரத்தைக் குறிப்பிட்ட இரண்டு நாடுகளுக்கிடையே அனுமதிக்க அவ்விரு நாடுகளும் மேற்கொள்ளும் ஒரு ஒப்பந்தம்.

இந்தியாவிலும் மார்ச் இறுதி வாரம் முதல் விமான சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மே மாத இறுதி வாரத்தில் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. அப்போது வெளிநாட்டு விமான சேவை தொடங்குவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, உள்நாட்டு விமான சேவை எப்போது 60 விழுக்காட்டை அடைகிறதோ, அப்போது சர்வதேச விமானப் போக்குவரத்தைத் தொடங்குவது குறித்து சிந்திக்கலாம் என்று தெரிவித்தித்தார்.

இதுவரை 1,103 சிறப்பு விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 2 லட்சத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: '68% பயணிகள் விமானப் பயணத்தையே பாதுகாப்பாக கருதுகின்றனர்' - ஆய்வில் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.