பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தல் தொடர்பான பரப்புரைகளும், சீட் ஒதுக்கீடு செய்வதும் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சாப்ரா மாவட்டத்தின் கீழ் உள்ள அம்னோர் தொகுதியில் எம்எல்ஏ சத்ருகான் திவாரி என்ற சக்ரா பாபாவுக்கு, இந்தாண்டு பாஜக கட்சி சீட் தராதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான வருத்தத்தை அவர், அம்னோர் தொகுதியில் தேர்தல் பணியில் மும்முரமாக செயல்பட்டு வந்தேன். சமீபத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது, மக்களுக்கு தேவையான உதவிகளையும், அவர்களை சமூக கூடத்தில் தங்க வைத்து தேவையான உணவுகளை 24 மணி நேரமும் செய்து வந்தேன். ஆனால், சீட் கிடையாது என்ற கட்சியின் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து விதமான மகிழ்ச்சியையும் விட்டுவிட்டு, ஒரு துறவியை போல் வாழ்வதற்கு முடிவு செய்துள்ளேன். இனி, வாழ்நாள் முழுவதும் நான் சாப்பாடு சாப்பிட மாட்டேன், வெறும் பழங்களை மட்டுமே சாப்பிட போகிறேன். அமைதியான போராட்டங்களை மட்டுமே ஏற்பாடு செய்வேன்" என்று கடிதம் எழுதியுள்ளார்..
மேலும் அவர், எனக்கு கட்சி சீட் வழங்காததற்கு முக்கிய காரணமானது, பாஜக எம்.பி. ராஜீவ் பிரதாப் ரூட்டியின் அரசியல் சூழ்ச்சிதான் .அவரால்தான் பாஜக முன்னாள் ஜேடி (எம்) எம்எல்ஏ கிருஷ்ணா சிங்கிற்கு டிக்கெட் வழங்கப்பட்டது. மங்கல் பாண்டே மற்றும் சுஷில் மோடி போன்ற தலைவர்கள்கூட இப்பகுதியில் எனக்கு அதிகரித்துவரும் புகழ் குறித்து பயப்படுகிறார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.