ETV Bharat / bharat

பிகார் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு? - உயர்மட்ட அலுவலர்கள் கூட்டம்‘

டெல்லி: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலை அக்கட்சி தலைமை இன்று வெளியிடயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிகார் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு?

author img

By

Published : Oct 5, 2020, 11:37 AM IST

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 3, 7 என மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை 10ஆம் தேதி நடைபெறும் என்றும் அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் 70 இடங்களில் போட்டியிடும் என்று தேஜஸ்வி யாதவ் அறிவித்தார்.

இதற்கிடையில், பிகார் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய ஏதுவாக, அக்கட்சியின் உயர்மட்ட அலுவலர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான மத்திய தேர்தல் குழு இன்று கூடுகிறது. இதில், தேர்தல் குழு பரிந்துரைக்கும் வேட்பாளர்கள் குறித்து விவாதித்து இறுதி செய்யப்படவுள்ளது. அதன்பிறகு, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்கட்ட பெயர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

பிகாரில் மொத்தம் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளில், 71 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக வரும் 28ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் அக்டோபர் ஒன்றாம் முதல் எட்டாம் தேதிவரை நடைபெறுகிறது.

இதையும் படிங்க: பிகார் தேர்தல் : மகா கூட்டணியின் தொகுதி பங்கீடு நிறைவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.