லாலு பிரசாத்தின் மருமகள் ஐஸ்வர்யா ராய். இவர், லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப்பின் மனைவி ஆவார். தேஜ் பிரதாப்புக்கும் ஐஸ்வர்யா ராயுக்கும் இடையே திருமண வாழ்வில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஐஸ்வர்யா ராய், ''எனக்கும் எனது கணவனுக்கும் திருமண வாழ்வில் விரிசல் ஏற்பட லாலு பிரசாத் மகள் மிசா பாரதிதான் காரணம். எனது கணவன் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடிய பின்னரும் நான் அவர் வீட்டிலேயே வசித்துவருகிறேன்" என்றார்.
மேலும், விவாகரத்து வழக்கு நிலுவையில் இருந்தாலும்கூட தாங்கள் விவாகரத்து செய்ததுபோல மிசா பாரதி தன்னை நடத்துவதாக ஐஸ்வர்யா ராய் குற்றஞ்சாட்டியுள்ளார்.
