பாட்னா: பிகார் மாநிலத்தின் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும், லாலு பிரசாத் யாதவ்வின் மூத்த மகனுமான தேஜ் பிரதாப் யாதவ் ஹசன்பூர் சட்டப்பேரவை தொகுயில் மனுத்தாக்கல் செய்கிறார்.
தற்போது இந்தத் தொகுதி லாலு பிரசாத் கட்சி வசமே உள்ளது. எம்.எல்.ஏ.வாக ராஜ் குமார் ராய் உள்ளார். இவர் இம்முறை தேஜ் பிரதாப் யாதவ்வுக்காக தொகுதியை விட்டுக்கொடுக்க உள்ளார்.
2015ஆம் ஆண்டு தேஜ் பிரதாப் வைசாலி மாவட்டத்திலுள்ள மகுவா சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் தற்போது தொகுதி மாறுகிறார்.
அதேநேரத்தில் தேஜ் பிரதாப்பை எதிர்த்து பாஜகவின் சார்பில் சதீஷ் குமார் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் 2010ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தேஜ் பிரதாப்பின் தாயாரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டவர் ஆவார்.
யாதவ்வின் இரும்புக் கோட்டையான ஹசன்பூரில் நவம்பர் 3ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: எம்.எல்.ஏ. உள்பட 15 முக்கிய பிரமுகர்கள் நிதிஷ் குமார் கட்சியிலிருந்து விலகல்!