ETV Bharat / bharat

பிகார் தேர்தல்: ஜேடியு பிளவு அரசியலால் தேசிய கூட்டணிக் கூட்டணிக்கு பயன் என்ன?

பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், அங்கு நடைபெறும் மத, சமூக ரீதியான பிளவு அரசியல் குறித்து ஈடிவி பாரத் செய்தி ஆசிரியர் பிலால் பட் எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம்.

Bihar elections
Bihar elections
author img

By

Published : Oct 11, 2020, 12:17 PM IST

மிகவும் பரபரப்பாக இருக்கும் பிகார் தேர்தல் களத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தனது தேர்தல் வியூகத்தை மிகவும் நுணுக்கமாக திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. சாதியம் அதன் கட்டமைப்பில் பல பரிமாணங்களைக் கொண்டுள்ள முஸ்லிம்கள் மற்றும் யாதவர்களின் மொத்த வாக்கு வங்கியை NDAவுக்கு எதிராக மாற்றுவது என்பது கடினம்.

பாஜக தலைமையிலான அரசாங்கம் நாடாளுமன்றத்தில் எடுத்த சில முடிவுகள், குறிப்பாக முஸ்லிம்கள் நலன்களுக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவை காரணமாக முஸ்லிம்கள் மற்றும் ஓபிசி மக்களிடையே செல்வாக்கு குறைந்திருந்தாலும் நிதீஷ் குமார் முஸ்லிம்களுக்கும் ஓபிசிகளுக்கும் பல ஆண்டுகாலம் செய்த நன்மைகள் காரணமாக செல்வாக்கு முற்றிலும் மறைந்து விடவில்லை என்றே கருதுகின்றனர் .

முஸ்லிம்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் கோபத்தைக் குறைக்க, முஸ்லிம்கள் மற்றும் யாதவர்களின் போதுமான பிரதிநிதித்துவத்துடன் சாதி சமநிலை பராமரிக்கப்பட்டது. NDA கூட்டணி கட்சியான JD(U) யாதவ, குறிப்பாக நிதீஷ் சமூகத்தைச் சேர்ந்த குர்மி மற்றும் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை களமிறக்கத் தயாராக உள்ளது.

பரேல்வி சிந்தனைப் பள்ளியின் முக்கிய முஸ்லீம் முகமாக விளங்கும் மேல்சபை உறுப்பினருமான மவுலானா குலாம் ரசூல் பால்யாவி, சுமார் 27 விழுக்காடு முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட மாவட்டமான தர்பங்காவில் JD(U) சார்பில் போட்டியிடும் சேர்ந்த ஃபராஸ் ஃபத்மிக்கு வாக்களிக்க கடந்த வாரம் தனது இனமக்களிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்திருப்பது நிதீஷின் வியூகம் சரியாக திட்டமிடப்பட்டுள்ளது என்பதற்கு ஒரு சான்று. பரேல்வி இனத்தவர்கள் பெரும்பான்மை பிகார் முஸ்லிம்களிடையே குறிப்பிடத்தக்க செல்வாக்கு உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

தற்போதைய நிலவரப்படி, 18 யாதவர்கள் களத்தில் உள்ளது JD(U)வை பொறுத்தவரை RJDக்கு எதிரான ஒரு அரணாக இருக்கும் அதே சமயத்தில் பட்டியலில் உள்ள 11 முஸ்லீம் வேட்பாளர்கள் RJDயின் முக்கிய செல்வாக்கை குறைப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த வியூகமாக இருக்கின்றனர்.

மேலும் பார்சா சட்டமன்றத் தொகுதியில் இருந்து JD(U) சார்பில் போட்டியிடும் சந்திரிகா ராய், RJD தலைவர் தேஜ் பிரதாப் யாதவின் முன்னாள் மாமனார். இவர் மகளை லாலுவின் மகன் திருமணமான ஆறு மாதங்களில் விவாகரத்து செய்தார். ராயின் குடும்பம் RJDயுடன் நீண்டகால தொடர்பு கொண்டிருந்தது, உண்மையில், அவரது தந்தை தரோகா பிரசாத் லாலுவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர்.

2015ல் RJD சார்பில் போட்டியிட்டு பாலிகஞ்ச் தொகுதியில் வென்ற ஜெயவர்தன் யாதவ், இந்த தேர்தலில் JD(U) சார்பில் போட்டியிடுகிறார் என்பது RJDக்கு மற்றொரு அடியாகும். அவர்களது சமூகத்தில் நல்ல செல்வாக்கில் இருக்கும் RJDயின் சில முக்கிய நபர்களை அவர்களது சமூகத்திற்கு எதிராக நிதீஷ் தூண்டிவிடுகிறார்.

நிதீஷுக்காக போட்டியிடும் முஸ்லிம் மற்றும் யாதவ சமூகங்களை மிகவும் சரியாக திட்டமிட்டுள்ளனர். யாதவர்களிடமிருந்தும், முஸ்லிம்களிடமிருந்தும் வேட்பாளர்களை கொண்டுவருவதன் மூலம் நிதீஷ் விளையாடும் பிளவு அரசியல், JD(U)வுக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் பெரிய கூட்டணியிடமிருந்து ஒரு பெரிய வாக்குப் வங்கி சரிவதை உறுதி செய்யும்.

மறுபுறம், காங்கிரசும் பாஜகவும் உயர் சாதியினரிடையே சமமான செல்வாக்கை கொண்டிருந்தாலும் பாஜகவின் தீவிர இந்துத்துவ நிலைப்பாடு காரணமாக காங்கிரஸின் நிலைமை பலவீனமடைந்து வருகிறது. பிகாரில் முஸ்லிம்களையும் பிற சாதி வாக்குகளையும் ஈர்ப்பதற்கான காங்கிரஸின் திட்டங்கள் 1947 முதல் நாற்பது ஆண்டுகள் நன்றாக பலனளித்திருந்த போதிலும் தற்போது அந்த நிலை இல்லை. இது 1990களில் லாலு யாதவ், நிதீஷ் குமார் மற்றும் ராம் விலாஸ் பாஸ்வான் போன்ற உயர் சாதியினர் அல்லாத தலைவர்கள் தோன்றிய பின்னர் தான் வாக்கு வங்கியை மாற்றியமைத்தது, இல்லையெனில் அது ஒரு கட்சிக்கு மட்டுமே சென்றிருக்கும்.

மேலும் மாநில சட்டப்பேரவையில் தாழ்த்தப்பட்டோர், ஓபிசி மற்றும் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்காமல் அவர்களிடம் விசுவாசத்தை எதிர்பார்க்கும் காங்கிரஸ், தனது பெரும்பாலான உறுப்பினர்களை உயர் சாதியினருக்கு அளித்தது.

அவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்கு முன், காங்கிரஸின் உயர் சாதி அரசியல்வாதிகள் தங்களது எதிர்ப்பை காட்டுவர். பிகார் தேர்தல் வரலாற்றில் தாழ்த்தப்பட்ட அரசியல்வாதிகள் உயர் சாதியினரின் சதித்திட்டங்களுக்கு எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதற்கு துர்கா பிரசாத் ராய் மற்றும் கர்பூரி தாக்கூர் போன்ற முதலமைச்சர்கள் சிறந்த எடுத்துக்காட்டுகள். மற்ற சாதிகளுக்கும் அதிகாரமளிக்கும் முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டதால் இரண்டு முதலமைச்சர்கள் குறைந்த காலம் மட்டுமே பதவி வகித்தனர்,

பிகாரில் சாதி பிரிவினை தான், தேர்தல் செயல்பாட்டில் மக்களின் பங்களிப்பை கிட்டத்தட்ட அதிகரித்தது. வாக்குப்பதிவு குறைவாக இருக்கும் போது உயர் சாதி அரசியலின் பயனை காங்கிரஸ் அடைந்தது. அதே சமயம் வாக்குப்பதிவு அதிகரிக்கும் போது, அது மாநிலத்தில் காங்கிரஸ் செல்வாக்கைக் குறைத்தது. மாநிலத்தில் சாதிகளை ஜனநாயகமயமாக்கியதால் போட்டியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

மாநில சட்டப்பேரவைக்கு யாருக்கும் அறுதி பெரும்பான்மை அளிக்க கூடாது என மக்கள் புத்திசாலித்தனமாகத் முடிவெடுத்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அது உண்மையில் சரியானது தான், ஏனெனில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த கட்சிகள் எப்போதும் இந்தியாவின் மிகவும் பின்தங்கிய மாநிலமான பிகார் மக்களை தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்தி வந்துள்ளனர்.

1952ல் வேட்பாளர்கள் எண்ணிக்கை 1594; வாக்குப்பதிவு 39.7% ஆக இருந்தது

1985ம் ஆண்டில் வேட்பாளர்கள் எண்ணிக்கை 4237; வாக்குப்பதிவு 56.3%

1990ல் வேட்பாளர்கள் எண்ணிக்கை 6629 ஆக இருந்தது வாக்குப்பதிவு 60%

1995ல் வேட்பாளர்கள் எண்ணிக்கை 8410; வாக்குப்பதிவு 61%

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.