பீகார் தலைநகர் முசாபர்நகர் மாவட்டத்தில் மூளை காய்ச்சல் (acute encephalitis syndrome) பரவி வருகிறது. இந்த காய்ச்சல் குழந்தைகள், முதியோர்களை எளிதாக தாக்குகிறது. இந்த காய்ச்சலால் தலைவலி, காய்ச்சல், உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே முசாபர்நகரின் ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 55 பேரும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 11 பேரும் காய்ச்சலுக்கு பலியாகியுளனர்.
அதேபோல் காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 130 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் மாதம் 22ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட வேண்டும், மீதியுள்ள மாணவர்களுக்கு காலை 10.30 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்பட வேண்டும் என மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.