ETV Bharat / bharat

பிகார் பரப்புரையில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய மோடி!

பாட்னா: அரசியலமைப்பு சட்டம் 370ஐ மீண்டும் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

மோடி
மோடி
author img

By

Published : Oct 23, 2020, 1:18 PM IST

பிகார் மாநிலத்தில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பரப்புரையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 22) தொடங்கினார். சசராமில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், அரசியலமைப்பு சட்டம் 370ஐ மீண்டும் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றனர் என தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "அரசியலமைப்பு சட்டம் 370ஐ நீக்க மக்கள் அனைவரும் காத்திருந்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்த பின் அதனை மீண்டும் கொண்டு வந்து விடுவோம் என எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அரசியலமைப்பு சட்டம் 370ஐ நீக்கியது. ஆனால், சிலர் அதனை கொண்டு வர நினைக்கின்றனர்.

இதுபோன்று தெரிவித்துவிட்டு பிகாரில் வந்து அச்சமின்றி வாக்கு கேட்கிறார்கள். இது பிகார் மக்களுக்கு அவமானம் இல்லையா? பிகார் மக்கள் தங்களின் மகன், மகள்களை ராணுவத்தில் சேர்த்து எல்லைக்கு அனுப்புகின்றனர்" என்றார். இந்த பொதுக் கூட்டத்தில், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரும் பிகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார் கலந்து கொண்டார்.

கரோனா, பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்ற விவகாரங்கள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து பேசாமல் காஷ்மீர் விவகாரம் குறித்து மோடி பேசியிருப்பது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

மோடி

ஆரம்பகட்டத்தில், அரசியலமைப்பு சட்டம் 370 நீக்கப்பட்டதை பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் விமர்சித்திருந்தார். மக்களவை, மாநிலங்களவைகளில் மத்திய அரசின் முடிவுக்கு ஐக்கிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஆனால், அதற்கு பின்னர், ஐக்கிய ஜனதா தள கட்சியை கலந்து ஆலோசிக்காமல் முடிவை எடுத்ததற்கே எதிர்த்தோம் எனவும் சட்டமாக நிறைவேற்றப்பட்டதால் அதனை ஆதரிக்கிறோம் என நிதிஷ் குமார் விளக்கம் அளித்திருந்தார்.

இதையும் படிங்க: சர்ச்சையை கிளப்பிய பாஜகவின் தேர்தல் வாக்குறுதி: விளக்கமளித்த மத்திய அமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.