பிகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. அங்கு அசுர பலம்பொருந்திய எதிர்க்கட்சியாக முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் கட்சியான ராட்ரீய ஜனதா தளம் விளங்குகிறது.
இங்கு மூன்று கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் ஆளும் கட்சி ஒரு அணியாகவும், எதிர்க்கட்சி மறுமுனையிலும் தேர்தலை சந்திக்கின்றன. இம்முறை மாயாவதி யாருக்கும் ஆதரவு அளிக்காமல் மூன்றாவது அணியாக களம் காண்கிறார்.
இந்தப் பரபரப்புகளுக்கு மத்தியில் பிகார் மாநில பகுஜன் சமாஜ் தலைவர் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு தாவிவிட்டார். இதனை தேஜஸ்வி யாதவ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாயாவதி கட்சிப் பிரமுகர், லாலு பிரசாத் யாதவ் கட்சிக்கு தாவியது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'யாராலும் தடுக்க முடியாது' - சூளுரையுடன் மீண்டும் ஹத்ராஸ் செல்லும் ராகுல்