ETV Bharat / bharat

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்: மூன்று கட்டங்களாக அக்.28 முதல் நவ.7 வரை நடக்கும்! - தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக அக்.28ஆம் தேதி தொடங்கி நவ.7ஆம் தேதி வரை நடக்கும் என தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

bihar-assembly-elections-2020-voting-in-3-phases-from-oct-28-to-nov-7-results-on-nov-10

author img

By

Published : Sep 25, 2020, 7:30 PM IST

2020ஆம் ஆண்டுக்கான பிகார் மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.28ஆம் தேதி தொடங்கவுள்ள தேர்தல், நவ.7ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை நவ.10ஆம் தேதி நடைபெறுகிறது. கரோனா வைரஸ் பாதிப்பிற்கு நடுவே இந்தியாவில் நடக்கவுள்ள முதல் தேர்தல் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முதல் கட்ட தேர்தல் 16 மாவட்டங்களில் உள்ள 71 தொகுதிகள் நடத்தப்படுகிறது. தேர்தலுக்கான அறிவிக்கை அக்.1ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அக். 8ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் திரும்பப்பெறுதல்: 12ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்தல் 28ஆம் தேதி நடக்கவுள்ளது.

இரண்டாம் கட்ட தேர்தல் 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளில் நடக்கவுள்ளது. இதற்கான அறிவிக்கை அக்.9ஆம் தேதி வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய அக். 16ஆம் தேதி கடைசி நாளாகும். இதனை திரும்பப்பெறுவதற்கு அக்.19ஆம் தேதி வரை நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் நவ.3ஆம் தேதி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்ட தேர்தல் 15 மாவட்டங்களில் உள்ள 78 தொகுதிகளில் நடக்கவுள்ளது. இதற்கான அறிவிக்கை அக்.13ஆம் தேதி வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அக். 20ஆம் தேதியும், வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு அக்.23ஆம் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட தேர்தல் நவம்.7ஆம் தேதி நடக்கவுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்க நேரம் ஒதுக்கியுள்ளதாகவும், காலை 7 மணிக்கு தொடங்கும் தேர்தல் மாலை 6 மணி வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்காக 7 லட்சம் சானிட்டைசர்கள், 46 லட்சம் முகக்கவசங்கள், 6 லட்சம் பாதுகாப்பு உபகரணங்கள், 6.7 லட்சம் ஃபேஸ் ஷீல்ட்கள், 23 லட்சம் கையுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்காக 7.2 லட்சம் கையுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் தேர்தல் நேரங்களில் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக பதிவிடுவோர் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். அதேபோல் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தபால் வாக்கு செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். தேர்தல் பொதுக்கூட்டங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டங்களை தேர்தல் அலுவலர்களோடு, சுகாதாரத் துறையினரும் பார்வையிடுவார்கள் என தெரிவித்தனர். ’

இதையும் படிங்க: சட்டவிரோதமாக சொத்துக்களை வாங்கி குவித்த தெலங்கானா ஏசிபி மீது வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.