ETV Bharat / bharat

ஒரே நாளில் 75 பாஜக தலைவர்களுக்கு கரோனா - பாஜக தலைவர்களுக்கு கரோனா தொற்று

பாட்னா: பிகார் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 75 பாஜக நிர்வாகிகளுக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது.

75 BJP leaders test positive for coronavirus

author img

By

Published : Jul 14, 2020, 1:24 PM IST

இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தற்போது ஒரு புறம் இயல்பு வாழ்க்கை திரும்பும் நிலையில், மறுபுறம் கரோனா பரவல் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், பிகார் மாநிலத்தில் கடந்த சில நாள்களாகவே வைரஸ் தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளது. அம்மாநிலத்தைச் சேர்ந்த 100 பாஜக நிர்வாகிகளின் உமிழ்நீர் மாதிரிகள் கரோனா சோதனைக்கு அனுப்பப்பட்டன.

அதில், பிகார் மாநில பாஜக பொதுச் செயலாளர் நாகேந்திர நாத், மாநில துணைத் தலைவர்கள் ராஜேஷ் வர்மா, ராதா மோகன் சர்மா என குறைந்தபட்சம் 75 பேருக்கு கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 75 பாஜக தலைவர்களுக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளதால் அம்மாநில பாஜக கலக்கத்தில் உள்ளது.

பிகார் மாநிலத்தில் முதன்முதலில் கடந்த மார்ச் 22ஆம் தேதி கத்தார் சென்று திரும்பிய ஒருவருக்கு கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டது. இதுவரை பிகாரில் 17 ஆயிரத்து 959 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 160 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: 'பாசிச கட்டுப்பாட்டில் இந்திய ஊடகங்கள்' - ராகுல் காந்தி தாக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.