மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 1984ஆம் ஆண்டு விஷவாயுக் கசிவு துயரம் நடந்தது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.
இந்த துயரத்துக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னின்று நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க செய்தவர்தான் இந்த அப்துல் ஜாபர்.
போபால் விஷவாயுக்கசிவு துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எவ்வித சமரசமுமின்றி வாதாடினார். கடைசிவரை யாரிடமும் சமரசம் செய்துக்கொள்ளவில்லை.
சில மாங்களுக்கு முன்பு அப்துல் ஜாபருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரின் சிகிச்சைக்கு உதவுவதாக கடந்த வாரம் மாநில அரசு அறிவித்தது. இதற்கிடையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: கணிதவியல் அறிஞர் வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்