ETV Bharat / bharat

பிகார் தேர்தல் : சிறையிலிருந்தே வேட்பாளர் பட்டியலைத் தேர்வு செய்யும் லாலு - ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறை

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் வேட்பாளர் பட்டியலை முடிவு செய்யும் இறுதிப் பணிகளில் அக்கட்சித் தலைவர் லாலு பிரசாத் ஈடுபட்டுள்ளார்.

Lalu Yadav
Lalu Yadav
author img

By

Published : Sep 30, 2020, 9:07 PM IST

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் அணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தேர்தலுக்கான இறுதிகட்டப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதாதாளம், பாஜக ஆகிய இரு பெரும் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பாக இக்கூட்டணியில் தொடர லோக் ஜனசக்தி கட்சி தயக்கம் காட்டி வருகிறது.

இந்நிலையில் முக்கிய எதிர்க்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியும் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இக்கட்சி 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வேட்பாளர் பட்டியலை முடிவு செய்யும் இறுதிப் பணியில் லாலு பிரசாத் யாதவ் மும்முரம் காட்டிவருகிறார்.

ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில் இருக்கும் அவரை கட்சியின் முக்கியத் தலைவரான போலா யாதவ் சந்தித்து வேட்பாளர் பட்டியல் குறித்து விரிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ராஷ்டிரிய ஜனதா தளத்தின் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பிகார் முதலமைச்சரை சந்தித்து உரையாடிய சுஷாந்தின் தந்தை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.