மேற்கு வங்கத்தில் தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 'பாரத் பந்த்' என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (Centre of Indian Trade Unions), இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ( Indian National Trade Union Congress) உள்ளிட்ட பத்து மத்திய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. இதில், தொழிற்சங்கம் பாரதிய மஸ்தூர் சங்கம் (Bharatiya Mazdoor Sangh) மட்டும் பங்கேற்கவில்லை.
போராட்டக்காரர்கள் கொல்கத்தாவின் ஹவுரா, காஞ்ச்ராபரா ரயில் நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் அரசுக்கு எதிராகச் சுவரொட்டிகள், பதாகைகள் வைத்துகொண்டு கோஷங்களை எழுப்பினர். இதனால், பல ரயில்கள் ரயில் நிலையங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசுப் பேருந்துகளை செயல்படவிடாமல் தடுத்துநிறுத்தினர். குறிப்பாக காலை 6 மணியளவில் ஒடிசாவின் தல்ச்சர், புவனேஸ்வர், பிரம்மபூர், பத்ராக், கெண்டுஜர்கர் ஆகிய இடங்களில் போராட்டம் தொடங்கியதால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இதையும் படிங்க: ஜேஎன்யு விவகாரம்: தீபிகாவை சாடிய முன்னாள் மத்திய அமைச்சர்