கேரள மாநில கல்வியறிவு திட்ட பாடநெறி மாணவி 105 வயதான பாகீரதி அம்மா. இவரின் சிறப்பான பணிகளைப் பாராட்டி இவருக்கு தேசிய விருதான நாரி சக்தி புரஸ் விருது வழங்கப்பட்டது.
இந்த விருது இவருக்கு சர்வதேச மகளிர் தினத்தில் குடியரசுத் தலைவர் வழங்குகிறார். சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாகீரதி அம்மாவை மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் பாராட்டினார்.
நான்காம் வகுப்புக்கு நிகரான பாடத்தில் பாகீரதி அம்மா கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெற்றிருந்தார். அப்போது இவருக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்தது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: சபரிமலை வாதம் முடிந்ததும், சிஏஏ மனு விசாரணை