இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் வணிக நடவடிக்கைகளில், மாநாடுகளில் தேதி மாற்றம் உள்ளிட்ட மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறவிருந்த தொழில்நுட்ப உச்சி மாநாடு, எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதிவரை காணொலி மூலமாக நடைபெறும் என தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான அஸ்வத் நாராயன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “தொழில்நுட்பத்தின் உதவியால் கரோனா நெருக்கடியை சமாளிப்பது குறித்து இம்மாநாட்டில் கலந்தாலோசிக்கப்படும். இந்த மாநாட்டில் அரசின் தகுந்த இடைவெளி உள்ளிட்ட கரோனா வழிகாட்டுதல் நெறிமுறை முறையாக பின்பற்றப்படும்” என்றார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் 40 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!