இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தை நோய் பாதிப்பு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அம்மாநிலத்தில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சில நாட்களுக்கு முன்பு கல்புர்கி மாவட்டத்தைச் சேர்ந்த 72 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து நிலைமையை உணர்ந்த கர்நாடக அரசு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து, மால்கள், திரையரங்குகள், பார்கள், வணிகவளாகங்களை மூட உத்தரவிட்டுள்ளது. மேலும் பெங்களூருவைச் சேர்ந்த பெரும்பாண்மையான மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்யுமாறு அறிவித்துள்ளன.
இதையடுத்து இந்தியாவின் முக்கிய பெருநகராமான பெங்களூரு எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் நிலையில் இன்று வெறிச்சோடிக் காணப்பட்டது. மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் காலியாகவும், சுமார் 300க்கும் மேற்பட்ட நகரப்பேருந்துகள் இயங்காமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையம், பேருந்து தளங்கள் மட்டுமல்லாது, பெங்களூரு நகரின் முக்கிய பூங்காக்களும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காலியாகக் காணப்பட்டன.
இதையும் படிங்க: ஹரியானாவில் ஒரு வயது குழந்தைக்கு கொரோனாவா?