பெங்களூரு மாநகராட்சியின் பதவிக்காலம் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் கரோனா பரவல் காரணமாக மாநகராட்சிக்கு உடனடியாக, அரசு தேர்தலை நடத்தவில்லை. மாநகராட்சித் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்செய்யப்பட்டது.
இதனை விசாரித்த, பெங்களூரு உயர் நீதிமன்றம், விரைவில் காலியாகவுள்ள 198 வார்டுகளுக்கு வாக்கெடுப்பு நடத்தவும், 10 வாரங்களுக்குள் தேர்தல்களை அறிவிக்கவும் மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து, உறுப்பினர்களைத் தேர்தெடுக்கும்வரை நிர்வாகத்தை கவனிக்க மூத்த ஐஏஎஸ் அலுவலர் கவுரவ் குப்தாவை அரசு நியமித்துள்ளது.
பெங்களூரு மிஷன் 2022
இந்நிலையில், ‘பெங்களூரு மிஷன் 2022’ தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர், "பெங்களூரு நகரத்தின் 75ஆவது ஆண்டு நிறைவு விழாவில் 2022ஆம் ஆண்டிற்குச் செல்லும்போது அனைத்து உள்கட்டமைப்பை மாற்றியமைப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல், தூய்மையான நகரமாக்குதல், பசுமையான நகரமாக மாற்றுதல், அருங்காட்சியகங்கள் மற்றும் கலாசார மையங்களை உருவாக்கி பண்பாட்டை மேம்படச் செய்தல் உள்ளிட்டவை மூலம் இந்த ‘பெங்களூரு மிஷன் 2022’ திட்டத்தைச் செயல்படுத்த முனைகிறோம்” என்றார்.
இதையும் படிங்க...'நான் தற்கொலைக்கு முயலவில்லை' - எடியூரப்பா உதவியாளர்