கர்நாடக மாநிலம், பெங்களூரு லேடிகுர்ஷான் சாலையில் உள்ளது ஐஎம்ஏ நகைக்கடை. இந்தக் நகைக்கடையில், சிறப்புப் புலனாய்வு அலுவலர்கள் நேற்று காலை 10 மணியில் இருந்து இரவு 9 மணி வரை சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ. 8.5 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம், ரூ. 9.5 கோடி மதிப்புள்ள வைரம், ரூ. 2 கோடி மதிப்புள்ள 450 கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.