மேற்கு வங்கம் மாநிலம் ஹூக்லி மாவட்டத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற்ற பத்தாம் வகுப்புத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள்தான் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளன. அந்தக் கேள்விகள்:
- ஜெய் ஸ்ரீராம் முழக்கத்தால் சமூகத்துக்கு ஏற்படும் தீங்கு என்ன?
- லஞ்சத்தை ஒழிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு ஆதரவாகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் இந்தக் கேள்விகள் உள்ளதாகப் பலரும் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இது குறித்து மேற்கு வங்க பாஜக பிரமுகர் ஒருவர் கூறுகையில், "பாஜக தனது கொள்கைகளைக் கல்வியில் புகுத்துவதாகக் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் திரிணமுல் காங்கிரஸ் தற்போது செய்துவருவதைப் பாருங்கள்" என்று ஆதங்கத்துடன் கேட்டுள்ளார். மேலும் இதைக் கண்டித்து உள்ளூர் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.