இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் வேகமாக பரவிவருகிறது. இதுவரை நான்கு லட்சத்து 56 ஆயிரத்து 183 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 14 ஆயிரத்து 476 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து வருகின்றன.
அந்த வகையில், மேற்கு வங்கத்தில் வரும் ஜூன் 30ஆம் தேதியோடு ஊரடங்கு முடியவுள்ள நிலையில், ஜூலை 30ஆம் தேதிவரை நீட்டித்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேலும், ஜூலை 30ஆம் தேதிவரை மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பள்ளி வளாகங்கள் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் ரயில், மெட்ரோ சேவைகள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் இதுவரை 14 ஆயிரத்து 728 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 580 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 9,218 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 4,930 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க:மேற்கு வங்கத்தில் கரோனா பாதித்த எம்.எல்.ஏ. உயிரிழப்பு