உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கோயிலை கட்டிமுடிக்க மூன்று ஆண்டுகள் வரை ஆகும் என ஸ்ரீராம ஜென்மபூமியின் தீர்த்க்ஷேத்ரா தெரிவித்துள்ளார்.
கோயிலை முழுவதுமாக கட்டிமுடிக்க ரூ.1100 கோடி வரை செலவாகும் என கூறப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் நன்கொடை வசூல் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் உள்ள ஸ்ரீராம் கோயில் முன்பாக இன்று நன்கொடை வசூலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான ராம பக்தர்கள் லட்சக்கணக்கில் நிதியுதவி அளித்தனர்.
அப்போது கோயில் முன்பாக யாசகம் எடுத்துக்கொண்டிருந்த ஊர்வசி கும்ஹர் என்ற மூதாட்டி, அவர் யாசகம் பெற்று சேமித்து வைத்திருந்த பணத்தில் இருந்து ரூ.50ஐ ராமர் கோயில் கட்ட நன்கொடையாக கொடுத்தார்.
இதையும் படிங்க: பட்டினியால் வாடும் இந்தியா - உலக பட்டினி அட்டவணை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்