மேற்கு வங்கம் மாநிலம் தென் தினாஜ்பூர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சாலை விபத்தில் மரணமடைந்தது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், அரசு அலுவலர்கள் தங்கள் உயிரை பணையம் வைத்து மக்களுக்காக பணியாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
“அம்டாலியில் உள்ள தனது அலுவலகத்திற்கு பகல் 1:30 மணியளவில், வாகனத்தில் வந்துகொண்டிருந்த வேளையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருக்கும் வயல் பகுதிக்குள் வாகனம் நுழைந்தது. பின்னர் அங்கிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
உடனடியாக அலுவலரும், ஓட்டுநரும் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டனர். ஆனால் போகும் வழியிலேயே, வட்டார வளர்ச்சி அலுவலரின் உயிர் பிரிந்தது. ஓட்டுநர் காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகிறார்” இவ்வாறு காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.