இந்திய- வங்கதேச சர்வதேச எல்லைப் பகுதி மேற்குவங்க மாநிலம் முர்ஜிதாபாத்தில் அமைந்துள்ளது. இந்த எல்லைப் பகுதியில் நேற்று காலை, இரு நாட்டு வீரா்கள் கலந்து கொள்ளும் கொடி கூட்டம் நடந்தது.
அப்போது வங்கதேச வீரர் ஒருவர் இந்திய வீரா்களை நோக்கி ஏகே 47 ரக துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார். இதில் இந்திய வீரா் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு வீரா் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் இந்திய வீரர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் அசாதுஷமன் கான் தெரிவித்துள்ளார்.
இந்திய வீரரை சுட்ட வங்கதேச வீரர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பெயர் ஸயித். ஸயித் துப்பாக்கியால் சுட்டத்தில் விஜய் என்ற வீரர் உயிரிழந்தார். அவரின் தலையில் குண்டு பாய்ந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் மரணித்து விட்டார். விஜய் தனது தந்தை, தாய், மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த சம்பவம் குறித்து இந்திய மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வங்கதேச அரசுடனும் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய வீரர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வங்கதேசம் விளக்கம் அளித்துள்ளது. அதில், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் படகில் இந்தியாவுக்குள் தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது அவர்கள் எங்களை நோக்கி முதலில் சுட்டனர். அதன் பின்னர் தற்பாதுகாப்புக்காக நாங்கள் அவர்களை தாக்கினோம். அதன் பின்னர் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒருவர் உயிரிழந்து விட்டார் என அறிந்துக் கொண்டோம் என தெரிவித்து இருந்தனர். இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நல்லுறவு இருந்து வருகிறது. ஒரு துப்பாக்கி தோட்டா சப்தம் கூட கேட்டதில்லை. இதற்கிடையில் தற்போது நடந்த இச்சம்பவம் ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: துர்கா பூஜையை நடனமாடி கொண்டாடிய எம்.பி. - கண்டனம் தெரிவித்த இஸ்லாமியர்கள்!