ETV Bharat / bharat

இந்திய பார் கவுன்சிலில் நான்கு வீடியோ கான்பரன்சிங் அறைகள் உருவாக்கம் - video conferencing facility to lawyers

உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் வழக்காடுவதற்காக நான்கு வீடியோ கான்பரன்சிங் அறைகளை இந்திய பார் கவுன்சில் உருவாக்கியுள்ளது.

video conferencing/virtual hearing rooms  video conferencing rooms for lawyers  BCI virtual hearing  BCI virtual hearing for lawyers  bar council of india  இந்திய பார் கவுன்சில்  வீடியோ கான்பரன்சிங்  பார் கவுன்சில் வீடியோ கான்பரன்சிங் அறை  வீடியோ கான்பரன்சிங்கில் வழக்கு விசாரணை  video conferencing facility to lawyers  virtual courts
நான்கு வீடியோ கான்பரன்சிங் அறையை உருவாக்கிய இந்திய பார் கவுன்சில்
author img

By

Published : May 24, 2020, 2:16 PM IST

கரோனா வைரஸ் தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக உச்ச நீதிமன்றம், மற்ற நீதிமன்றங்கள் வழக்குகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்து வந்தன. இதன் நடைமுறை சிக்கல்களை வழக்கறிஞர்கள் தெரிவித்ததையடுத்து இந்திய பார் கவுன்சில் ஒரு ஏற்பாட்டைச் செய்துள்ளது.

உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் வழக்கறிஞர்களின் பயன்பாட்டுக்காக சிறந்த உபகரணங்கள், வைஃபை வசதியுடன் நான்கு வீடியோ கான்பரன்சிங் அறைகளை இந்திய பார் கவுன்சில் உருவாக்கியுள்ளது.

இதனைப் பயன்படுத்துவதற்கு வழக்கறிஞர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது எனவும் வருகின்ற 26ஆம் தேதி முதல் இது பயன்பாட்டுக்கு வரவுள்ளதாகவும் பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்த அறைகளை குறிப்பிட்ட நேரத்தில் பயன்படுத்த 36 மணி நேரத்திற்கு முன்பே இ-மெயில் மூலம் பதிவு செய்யவேண்டும் என தெரிவித்துள்ள பார் கவுன்சில், விசாரணையின்போது நான்கு பேருக்கு மேல் அறையில் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும், வழக்கறிஞர்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி என்-95 வகை முகக்கவசங்களையும் அணிந்திருக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சைபர் தாக்குதல்கள் 37 விழுக்காடு அதிகரிப்பு - அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.