கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து, நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர்த்து, தேசிய தலைநகரில் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், இன்று இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், 'டெல்லியை மீண்டும் திறப்பதற்கான நேரம் வந்துவிட்டது. கரோனா வைரஸுடன் வாழ, நாம் தயாராக இருக்க வேண்டும். நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர, மற்ற பகுதிகளில் ஊரடங்கை தளர்த்துவதில் மாநில அரசு தயார் ஆக இருக்கிறது’ என்றார்.
இதனிடையே ஊரடங்கை தளர்த்துவது தொடர்பாக டெல்லி மக்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து கேட்டுள்ளார்.
இதையும் படிங்க:மருத்துவ உபகரணங்களுடன் டெல்லி வந்தடைந்த ஸ்பைஸ் ஜெட் விமானம்!