ETV Bharat / bharat

அரசு கடன்களை மறுசீரமைப்பு செய்யலாம், ஆனால்..! - உச்ச நீதிமன்ற செய்திகள்

டெல்லி: கோவிட்-19 பரவல் காரணமாக மத்திய அரசு கடன்களை மறுசீரமைப்பு செய்யலாம், ஆனால் இதனால் நேர்மையாக கடன் பெறுவோரை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banks free to restructure loans, but can't penalise borrowers availing moratorium benefit, SC told

author img

By

Published : Sep 2, 2020, 3:56 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. இதன் காரணமாக அனைத்து தொழில் நிறுவனங்களும் முற்றிலும் முடங்கின.

இதனால் வேலையிழந்த மக்கள் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்துவருகின்றனர். கடன்களுக்கான மாத தவணையை ஆறு மாதங்கள் நிறுத்தி வைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இருப்பினும் moratorium எனப்படும் இந்த காலத்தில் பொதுமக்கள் கட்ட வேண்டிய கடனுக்கான வட்டிக்கு வட்டியை வங்கிகள் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன்பாக நடைபெற்று வருகிறது.

கஜேந்தர் சர்மா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "ரிசர்வ் வங்கி இந்த திட்டத்தை அறிவித்தது, தற்காலிகமாக இ.எம்.ஐ. தொகையை நாங்கள் செலுத்த தேவையில்லை என்று நினைத்தோம். ஆனால், அதன் பின்னர்தான் தெரிந்தது இந்த நிறுத்திவைப்பு காலத்தில் கடன்களின் வட்டிகளுக்கு வட்டி கணக்கிடப்படுகிறது என்று. இது மக்களுக்கு மேலும் சுமையை அளிக்கும்.

அவர்கள் வங்கிகளுக்கு நிறைய நிவாரணம் வழங்கியுள்ளனர். ஆனால் பொதுமக்களுக்கு உண்மையான வகையில் எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. ரிசர்வ் வங்கி அறிவித்த ஒரு திட்டத்தை பெறுவதற்காக யாரும் அபராதம் (வட்டிக்கு வட்டி) விதிக்க முடியாது.

தற்போது கடன்களை மறுசீரமைக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால், நேர்மையாக கடன் பெறுவோரை பாதிக்காத வகையில் அரசு கடன்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்" என்றார்.

இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (CREDAI) சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிஏ சுந்தரம், "கடன் நிறுத்திவைப்பு காலத்தை குறைந்தபட்சம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்.

இந்த காலகட்டத்தில் வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய முடியாவிட்டால், வங்கிகள் சேமிப்பு கணக்கிற்கு எத்தனை விழுக்காடு வட்டியை அளிக்கிறதோ, அதே அளவு வட்டியை கடன்தாரர்களிடம் இருந்து வசூலிக்கலாம்" என்றார்.

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான மூத்த தலைமை வழக்கிறஞர் துஷார் மேத்தா, "கரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவின் ஜிடிபி 23 விழுக்காடு வரை குறைந்துள்ளது. மேலும், கடன் நிறுத்திவைப்பு காலத்தில் வட்டியை வசூலிக்காமல் இருப்பது அடிப்படையில் தவறு.

இந்த கடன் நிறுத்திவைப்பு காலத்தை இரண்டு ஆண்டுகள் வரை ரிசர்வ் வங்கியால் நீட்டிக்க முடியும். மேலும், வங்கி கடனாளிகளின் மன அழுத்தங்களைப் போக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது" என்றார்.

இதையும் படிங்க: 'ஜிஎஸ்டி முதல் ஜிடிபி வரை' - மோடியை வெளுத்து வாங்கும் ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.