டெல்லி: வங்கிக் கடன் மோசடி செய்த வழக்கில், திருச்சியைச் சேர்ந்த நிறுவனத்தில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தி நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், வைர நகைககளை கைப்பற்றியுள்ளனர்.
திருச்சி சிதர் நிறுவனத்தில் தலைவர் சுப்புராஜ், நிர்வாக இயக்குநர் போதிராஜ், என்.எஸ்.கே பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் இயக்குநர் என்.எஸ்.கே கலைராஜா ஆகிய மூவரும் இணைந்து இந்தியன் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் ரூ.1,340 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து வங்கிகள் அளித்த புகாரின்பேரில், அவர்கள் மீது சட்ட விரோத பண மோசடி தடுப்பு வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், அம்மூவர் வீட்டிலும் சோதனை நடத்தி 4.43 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகளை கைப்பற்றியுள்ளனர்.
அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கானது, 2018ஆம் ஆண்டு சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமைந்துள்ளது. கட்டுமானம் என்ற பெயரில் திட்டமிட்டு அம்மூவரும் இந்தியன் வங்கி உட்பட்ட பல்வேறு வங்கிகளை ஏமாற்றியுள்ளனர்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சிகளை வேட்டையாடும் ஆளுங்கட்சியின் கருவி அமலாக்கத்துறை'- மெகபூபா முப்தி கடிதம்!