ETV Bharat / bharat

கப்பல் - விசைப்படகு மோதி விபத்து; உயிர் தப்பிய ஊழியர்கள்! - Kolkata Port Trust

கொல்கத்தா: இந்திய கப்பல் மீது வங்கதேச விசைப்படகு மோதிய விபத்தில் 13 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

barge
barge
author img

By

Published : Mar 13, 2020, 9:24 AM IST

வங்கதேச நாட்டில் இருந்து 900 டன் சாம்பலுடன், ‘மா மமோடமோய்’ (Ma Mamotamoi) என்ற விசைப்படகு கொல்கத்தா அருகே நேற்று வந்துகொண்டிருந்தது. தனியார் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

13 ஊழியர்களுடன் வந்துகொண்டிருந்த இந்தப் படகானது, கொல்கத்தா துறைமுகம் அருகே வந்தடைந்தபோது, தவறான திசையில் சென்று துறைமுகத்துக்குச் சொந்தமான கப்பலுடன் மோதி விபத்து ஏற்பட்டது.

கப்பல் - விசைப்படகு மோதி விபத்து

இந்த விபத்து குறித்து தகவலறிந்த கடலோரக் காவல் படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படகில் சிக்கியிருந்த 13 ஊழியர்களையும் பத்திரமாக மீட்டனர். இதற்கிடையே கப்பல் மூழ்கியதால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மேலும், இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கடலோரக் காவல்படையில் சேர்க்கப்பட்ட 6ஆவது புதிய போர்க்கப்பல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.