ETV Bharat / bharat

பெங்களூரு கலவரம்: காவல்துறையினர் அதிரடி - Bangalore Violence

பெங்களூரு கலவரம் தொடர்பாக இதுவரை 290 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு கலவரம்
பெங்களூரு கலவரம்
author img

By

Published : Aug 15, 2020, 3:06 PM IST

கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் அகண்ட ஸ்ரீநிவாஸ் மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் ஃபேஸ்புக்கில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், இஸ்லாம் மதத்திற்கு எதிரான கருத்துகள் இருந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து பெங்களூருவிலுள்ள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரின் வீடு அடித்து நொறுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அங்கு பெரும் வன்முறை வெடித்தது. இதற்கிடையே நடந்த கல்வீச்சு மற்றும் வன்முறை சம்பவங்களில் 60க்கும் மேற்பட்ட காவலர்கள் தாக்கப்பட்டனர். கலவரம் தொடர்பாக இதுவரை 290 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கலவரத்தில் சிக்கி மூவர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். டிஜே ஹல்லி, கேஜி ஹல்லி காவல்நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 16) காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பாக காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் கலிம் பாட்ஷா நேற்று (ஆகஸ்ட் 14) கைது செய்யப்பட்டார்.

கலவரத்தை பயன்படுத்தி பாட்ஷா துப்பாக்கியை வைத்து சுட்டதும் தாக்குதல் நடத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. கலவரத்திற்கு முக்கிய காரணமான, ஸ்ரீநிவாஸ் மூர்த்தியின் உறவினர் நவீனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்துவருகின்றனர். இஸ்லாம் மதம் குறித்து அவதூறு கருத்துகளை பரப்பியதாக நவீன் ஒப்புக் கொண்டுள்ளார்.

முன்னதாக, தனது மொபைல் போனை தொலைத்துவிட்டதாக அவர் தெரிவித்திருந்தார். ஸ்ரீநிவாஸ் மூர்த்தியின் வீட்டை காவல்துறையினர் தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். ஆகஸ்ட் 11ஆம் தேதி இரவு நடைபெற்ற கலவரம் தொடர்பாக, ஏழு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலவரத்தில் தொடர்புடைய 16 பேர், சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. பிஃஎப்ஐ என்ற இஸ்லாமிய அமைப்பின் அரசியல் கட்சியே சமூக ஜனநாயக கட்சி ஆகும். கலவரத்திற்கு தனக்கும் சம்பந்தம் இல்லை என சமூக ஜனநாயக கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இந்திய இறையாண்மை மீதான மரியாதை அனைத்துக்கும் மேலானது - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.