உத்தரகாண்டில் நிலச்சரிவு ஏற்படுவது வழக்கான ஒன்று. இதன் காரணமாக, அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, போக்குவரத்து நெரிசலை குறைத்து 20 கிராமங்களை இணைக்கும் நோக்கில் பிதோராகர் மாவட்டம் ஜவுலிபி பகுதியில் பெய்லி பாலத்தை கட்ட திட்டம் வகுக்கப்பட்டது.
ஆனால், தொடர் கனமழை காரணாக, பாலத்தின் கட்டுமான பணிகள் பெரிய அளிவில் பாதிக்கப்பட்டது. இருப்பினும், கடும் முயற்சிகளுக்கிடையே 50 மீட்டர் தூரத்திற்கு பாலம் கட்டப்பட்டது. ஆனால், கடந்த ஜூலை 27ஆம் தேதி, கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அந்த பாலம் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, அப்போது உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை.
இதையடுத்து, கனமழைக்கு இடையே எல்லை சாலை அமைப்பின் துரித நடவடிக்கையால், மூன்றே வாரத்தில் 180 அடி பாலம் கட்டப்பட்டது. பெய்லி பாலத்தின் கட்டுமான பணிகள் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 16) நிறைவுபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 20 கிராமங்களில் வாழும் 15,000 பேர் பயன்பெறவுள்ளனர். இந்த பாலத்தின் மூலம் அத்தியாவசிய பொருள்கள் கொண்டுச் செல்லப்படவுள்ளது.
இதையும் படிங்க: 6 வருடத்திற்கு பின் 60 அடியை எட்டிய கோதாவரி - மாவட்ட நிர்வாகம் 3ஆம் கட்ட எச்சரிக்கை!