பெங்களூரு: டெல்லியிலிருந்து பெங்களூருவுக்கு புதன்கிழமை (அக்.7) மாலை இண்டிகோ விமானம் ஒன்று பயணித்தது. அந்த விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரும் பயணித்தார்.
இந்நிலையில் அப்பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு விமானத்தில் இருந்த மருத்துவக் குழுவினர்கள் பிரசவம் பார்த்தனர்.
அப்போது அவருக்கு விமானத்திலே அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும்-சேயும் நலமுடன் உள்ளனர். இந்நிகழ்வுகளுக்கு இடையே இரவு 7.30 மணிக்கு விமானம் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இதையடுத்து விமான நிலையத்தில் தாயிக்கும்- சேயிக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சத்தியமங்கலம், இளம்பெண்ணுக்கு 108 ஆம்புலன்சில் குவா..! குவா...!