ETV Bharat / bharat

கர்ப்பிணி மனைவியை சைக்கிளில் அழைத்துச் சென்ற கணவர்... சாலையில் பிறந்த குழந்தை!

லக்னோ: சைக்கிளில் கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு கணவர் அழைத்து செல்லும்போது, சாலையிலேயே குழந்தை பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

sdsd
sd
author img

By

Published : Apr 12, 2020, 11:28 AM IST

Updated : Apr 13, 2020, 8:45 AM IST

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹப்பூர் மாவட்டத்தில், ரகுநாத்பூர் கிராமத்தில் வசித்துவரும் பெண் ஒருவருக்கு, ஏப்ரல் 9ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால், ஊரடங்கு உத்தரவால் பொது போக்குவரத்து இல்லாத காரணத்தினால், சுமார் 10 கி.மீட்டரில் உள்ள மத்னாபூர் சுகாதார மையத்திற்கு, அப்பெண்ணை கணவர் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.

அந்தத் தம்பதி சிக்கந்தர்பூரைத் தாண்டி சென்றுகொண்டிருக்கும்போது, பெண்ணிற்குப் பிரசவ வலி அதிகமாகி, சாலையிலேயே அழகியப் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இதைப் பார்த்த அப்பகுதியைச் சென்ற நபர் ஒருவர், காவல் துறைக்குத் தகவல் அளித்தார்.

இந்தத் தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவலர் ஒருவர், அருகிலிருந்தவர்களின் உதவியோடு உடனடியாக அப்பெண்னை சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் அபர்ணா கூறுகையில், "தற்போது குழந்தையும், தாயும் நலமுடன் இருக்கிறார்கள். இக்கட்டான சூழ்நிலையில் உடனடியாக உதவிய அந்தக் காவலருக்கு பாராட்டுகள்" என்றார்.

இதையும் படிங்க: 14 மாதக் குழந்தையின் உயிரைப் பறித்த கரோனா வைரஸ்!

Last Updated : Apr 13, 2020, 8:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.