உத்தரப் பிரதேசம் மாநிலம் அயாத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில், ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் 2019ஆம் ஆண்டு அனுமதி வழங்கியிருந்தது. இந்தப் பணிகளுக்கு மேற்பார்வையாளராக ’ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா’ என்ற அறக்கட்டளையை நிர்ணயித்துள்ளனர். கடந்த ஒருவாரமாக நிலத்தை சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு ஜூலை 2ஆம் தேதி பூமி பூஜையுடன் கட்டுமானப் பணிகள் தொடங்க திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலின் பூமி பூஜை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அறக்கட்டளை செயலாளர் கூறுகையில், "நாட்டின் பாதுகாப்புதான் மிகவும் முக்கியம். எல்லையில் இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவிவருவதை கருத்தில் கொண்டு, ராமர் கோயிலின் பூமி பூஜையை தற்காலிமாக தள்ளிவைத்துள்ளோம். எல்லா விஷயங்களும் ஆராய்ந்து புதிய தேதியை விரைவில் அறிவிப்போம்” என்றார்.
இதனிடையே, உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் இன்று அயோத்தி கோயிலின் பூமி பூஜை திட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட திட்டமிடப்பட்டிருந்ததும் ரத்துசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:முதலமைச்சரின் சேவை மையத்தில் 80 பேருக்கு கரோனா உறுதி