ETV Bharat / bharat

ராம ஜென்ம பூமியிடமிருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தை திருப்பியளித்த எஸ்பிஐ - ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை

லக்னோ: கடந்த வாரம் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் கணக்கிலிருந்து மோசடி செய்யப்பட்ட ஆறு லட்சம் ரூபாயை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) திருப்பி அளித்துள்ளது.

ayodhya-temple-trust-gets-back-fraudulently-withdrawn-rs-6-lakh

author img

By

Published : Sep 15, 2020, 3:18 PM IST

ராமர் கோயில் கட்டுவதற்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் கணக்கிலிருந்து நான்கு மாதங்களில் இரண்டாவது முறையாக இணைய தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பாக ராம மந்திர் அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், ”மோசடி செய்யப்பட்ட பணத்தை திருப்பித் தருமாறு வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளோம். இந்தப் பணம் வங்கிக், கணக்கிலிருந்து மோசடியாக சிலர் எடுத்துள்ளனர்" என்றார்.

எஸ்பிஐ அயோத்தி கிளையின் மேலாளர் பிரியான்ஷு சர்மா கூறுகையில், “மோசடி செய்தவர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) குளோன் (அதேபோன்று) செய்யப்பட்ட காசோலைகளைத் தயாரித்துள்ளனர்.

கோயில் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் நாங்கள் அந்தத் தொகையைத் திருப்பித் தந்துள்ளோம், மேலும் அந்தப் பணத்தை பஞ்சாப் நேஷனல் வங்கியிடமிருந்து மீட்டெடுப்போம்” என்றார்.

கடந்த வாரம் லக்னோவில் உள்ள எஸ்பிஐ வங்கியில் காசோலை சரிபார்க்கப்பட்டபோது மோசடி நடந்ததது தெரியவந்தது. இதேபோன்று 10 நாள்களுக்கு முன்பு அறங்காவலர்களின் போலி கையொப்பங்களுடன் இரண்டு குளோன் செய்யப்பட்ட காசோலைகள் மூலம் அறக்கட்டளை வங்கிக் கணக்கிலிருந்து மோசடியாக பணம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.