ETV Bharat / bharat

அயோத்தி விவகாரம் - பா.ஜ.கவுக்கு காங்கிரஸ் அறிவுரை! - அயோத்தி விவகாரம்

டெல்லி: அயோத்தி விவகாரம் முடிந்துவிட்டது, இனி மக்கள் பிரச்னைக்கு திரும்புங்கள் என்று பாரதிய ஜனதாவுக்கு காங்கிரஸ் அறிவுரை வழங்கியுள்ளது.

Ayodhya over, now focus on public issue says congress
author img

By

Published : Nov 10, 2019, 11:59 AM IST

அயோத்தி விவகாரம் பல தசாப்தங்களாக நடந்து வந்தது நாம் அறிந்ததே. அந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. இனியாவது மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துங்கள் என்று பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் அறிவுரை வழங்கியுள்ளது. இதுகுறித்து கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடாங்கர் (Girish chodankar) கூறியதாவது,

பா.ஜனதா ஒவ்வொரு தேர்தலிலும் அயோத்தி விவகாரத்தை எழுப்பிவந்தது. தற்போது அந்த பிரச்னைக்கு நீதிமன்றம் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இப்பிரச்னையை அரசியல் வாக்கு வங்கி அரசியலுக்காக இழுத்தடிக்காமல், தீர்வுக்கான வழியை தேடுங்கள். பிரதமர் நரேந்திர மோடி சாதாரண மக்களுக்கு நல்ல நாட்களை (அச்சே தீன்) கொடுப்பேன் என்றார்.

ஆனால் அந்த சாதாரண மக்கள் அவதியுறும் போதெல்லாம், ஜம்மு-காஷ்மீர் பிரச்னை, அயோத்தி விவகாரம், பாகிஸ்தான் எனக் கூறி கவனத்தை திசைதிருப்புகின்றனர். நாட்டில் தற்போது வேலையில்லாத திண்டாட்டம், பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் அதிகரிப்பு, விவசாயிகள் பாதிப்பு, கறுப்பு பணம் என பல்வேறு பிரச்னைகள் உள்ளது. இனிவரும் காலங்களில் இதில் கவனம் செலுத்துங்கள்.

இவ்வாறு அவர் பா.ஜ.க. தலைவர்களுக்கு அறிவுரை கூறினார்.

இதையும் படிங்க: ‘ரஜினி எந்த கட்சிக்கும் கீழ் செயல்படமாட்டார்’ - திருநாவுக்கரசர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.