அயோத்தி வழக்கில் ஷியா வக்பு வாரியத்தின் மனுவை தள்ளுபடி செய்தும், நிர்மோஹி அகாரா அமைப்பு சார்பாக தொடரப்பட்ட மனுவை நிராகரித்தும் நீதிபதிகள் தீர்ப்பை வாசித்துவருகின்றனர்.
அயோத்தி வழக்கு குறித்து நீதிபதிகள், "பாபர் மசூதி, பாபர் ஆட்சியில்தான் கட்டப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இறை நம்பிக்கைக்குள் செல்வது நீதிமன்றத்திற்கு தேவையற்றது எனக் கருதுகிறோம். பாபர் மசூதி எப்போது கட்டப்பட்டது என்பதற்கு துல்லியமாக ஆதாரம் ஏதும் இல்லை.
காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்திய தொல்லியல் துறை கொடுத்த ஆதாரங்கள் ஆராயப்பட்டன. 12ஆவது நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இருந்ததாக இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. 12, 16 ஆம் நூற்றாண்டுக்கு இடையே அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் என்ன இருந்தது என்பது குறித்த தெளிவான ஆதாரம் இல்லை" எனத் தெரிவித்தனர்.