உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி, பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கை மார்ச் 8ஆம் தேதி விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஆராய மத்தியஸ்தர் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
முன்னாள் நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் , மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழு அளித்த அறிக்கை தொடர்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது சமரச பேச்சுவார்த்தையை முழுமையாக முடிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என மத்தியஸ்தர் குழு கேட்டுக்கொண்டது. இதையடுத்து ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.