கரோனா லாக்டவுன் காரணமாக நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து முடக்கத்திலிருந்த நிலையில், வரும் 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், அடுத்த மூன்ற மாத காலத்திற்கு விமான பயணக் கட்டணத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களுக்கான குறைந்தபட்ச பயணக் கட்டணம் ரூ.3,500 எனவும் அதிகபட்ச கட்டணம் ரூ.10,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், விமானப் போக்குவரத்து பயண நேரத்திற்கு ஏற்றார்போல் ஏழு வழித்தடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
பிரிவு | வழித்தட பயண நேரம் |
1 | 40 நிமிடங்களுக்கும் குறைவு |
2 | 40 - 60 நிமிடம் |
3 | 60 - 90 நிமிடம் |
4 | 90 - 120 நிமிடம் |
5 | 120 - 150 நிமிடம் |
6 | 150 - 180 நிமிடம் |
7 | 180 - 210 நிமிடம் |
மேற்கொண்ட வழித்தடங்களில் அடுத்த மூன்று மாதத்திற்கு குறைந்தபட்ச, அதிகப்பட்ச கட்டணத்தின் மத்திய விலையில் 40 விழுக்காடு பயணச்சீட்டுகள் விற்பனை செய்யப்படும். உதாரணமாக குறைந்தபட்ச கட்டணம் ரூ.4,000 மற்றும் அதிகபட்ச கட்டணம் 10,000ஆக இருப்பின், ரூ.7,000த்துக்கும் குறைவான தொகையில் 40 விழுக்காடு பயணச்சீட்டுகள் விற்கப்படும்.
இதையும் படிங்க: அதிதி சிங்கை தகுதிநீக்கம் செய்யவில்லை என்றால் நீதிமன்றம் செல்வோம்' - காங்கிரஸ்