கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பொதுப்போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் வரும் திங்கள்கிழமை முதல் மீண்டும் உள்நாட்டுப் பயணிகள் விமான சேவைகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்திய விமான நிலைய ஆணையம் பயணிகள், விமான நிறுவனங்கள், ஊழியர்கள், பணியாளர்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகளைச் சுருக்கமாக வெளியிட்டுள்ளது. அதில்:
- பயணிகள் தங்களுடன் ஒரே ஒரு பையை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும்.
- பயணிகளுக்கு விமான நிலையங்களில் உணவுப் பொருள்கள் வழங்கப்படாது.
- பயணிகள் இணையத்தின் வாயிலாக மட்டுமே உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
- விமான ஊழியர்களின் வாயிலாகப் பயணிகள் சோதனை செய்யப்பட மாட்டார்கள்.
- 14 வயதிற்குள்பட்ட பயணிகளைத் தவிர மற்ற அனைவரும் மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
- விமான நிலைய நிறுவனங்கள் பயணிகள் தங்களை கிருமிநாசினிகள் கொண்டு சுத்தப்படுத்திக் கொள்வதற்கான வசதிகளைச் செய்திருக்க வேண்டும்
- விமான நிறுவனங்கள் இந்தப் பெருந்தொற்று காலத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்.
- விமானம் புறப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்பே பயணிகள் வர வேண்டும். இருபது நிமிடங்களுக்கு முன்பே போர்டிங் கேட் மூடப்படும் என்பன அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: விமான பயணிகளுக்கான விதிமுறைகள் வெளியீடு!